pengal.

pengal.

Get In Touch

தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்: அறிகுறிகள் இப்படித்தான் இருக்கும்… எச்சரிக்கும் டாக்டர்!

டெங்கு காய்ச்சல் வருடந்தோறும் வருடக்கூடிய ஒன்றுதான். செப்டம்பர் மாதங்களில் இதன் தாக்கம் கூடுதலாக இருக்கும். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக அரசும் சுகாதாரத்துறையும் டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் தீவிரமாக இருப்பதாகவும் எச்சரிக்கையுடன் கவனமாக இருக்கவும் வலியுறுத்துகிறது.


தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் (ஏறத்தாழ  16 ஆயிரம் பேர்  நெருங்கியுள்ள நிலையில் உண்மையில் டெங்கு காய்ச்சலால் அச்சம் கொள்ள வேண்டுமா? தொற்று நோய்க்கிருமிகள் சிகிச்சை நிபுணர் டாக்டர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன்  சொல்வது என்ன?


டெங்கு என்றால் என்ன


டெங்கு என்பது டெங்கு வைரஸ்  DENV  என்னும் நான்கு வகையான  வைரஸ்களில் ஏதேனும் ஒன்றால் ஏற்படக்கூடிய வைரஸ் நோய். டெங்கு வைரஸால் பாதிக்கப்பபட்ட கொசு உங்களைக் கடிக்கும் போது அந்த வைரஸ் இரத்தத்தில் நுழைந்து தன்னைத்தானே அதிகரித்துக்கொள்ளும்.


டெங்கு வர காரணம்


இதற்கு ஏடிஸ் கொசுக்கள் காரணம். டெங்கு, ஜிகா மற்றும் சிக்கன்குனியா போன்ற வைரஸ்களையும் இந்தக் கொசுக்கள் தான் பரப்புகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவரை கடித்துவிட்டு, பிறகு வேறொருவரை கடிப்பதன் மூலம் அவருக்கும் அந்த நோயை கடத்துகின்றன.  டெங்கு இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை குறைக்கலாம். உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தின் எதிர்வினை இரத்த நாளங்களில் கசிவை ஏற்படுத்தக்கூடும்.  இவை இரண்டும் தீவிரமாகும்போது அது உயிருக்கு ஆபத்தான அறிகுறிகளை உண்டு செய்யும்.


டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் 


டெங்கு அறிகுறிகள் இல்லாமல் லேசான அறிகுறிகளுடன் அல்லது மிகக் கடுமையான அறிகுறிகளுடன் இருக்கலாம்.  கொசு கடித்த நான்கு முதல் பத்து நாட்களுக்குப் பிறகு அறிகுறிகள் தோன்றும்

  • அதிக காய்ச்சல்
  • சொறி
  • தோலுக்கு அடியில் காயம்
  • சொறி
  • குமட்டல் அல்லது வாந்தி
  • தசை, எலும்பு மற்றும் மூட்டுவலி
  • வயிறு வலி
  • இரத்த வாந்தி அல்லது மலத்தில் ரத்தம்
  • மூக்கில் இரத்தம் வடிதல்
  • ஈறுகளில் இரத்தக்கசிவு
  • அதீத சோர்வு போன்றவை இருந்தால் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

குறிப்பாக கர்ப்பிணிகள் செங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும்போது அது கருச்சிதைவு அல்லதுகுறைந்த பிறப்பு  எடை கொண்ட குறைமாத பிரசவத்தை ஏற்படுத்தலாம். 


யாருக்கு டெங்கு ஆபத்து


குழந்தைகள், வயதானவர்கள், நீரிழிவு, பிபி, இதய நோயாளிகள், கர்ப்பிணிகள், நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம். எனினும் அச்சம் வேண்டாம் உரிய பாதுகாப்பு செய்துகொண்டால் நோய் வராமல் தடுக்க முடியும். 


டெங்கு பரிசோதனை


அறிகுறிகளுடன் மருத்துவரை சந்தித்தால்  இரத்த மாதிரியின் சோதனை மூலம் கண்டறியப்படும். இது மட்டுமே சீரான பரிசோதனையாக இருக்கும்.

டெங்கு உறுதி செய்யப்பட்டால் காய்ச்சலுக்கு பிரத்யேக மருந்துகள் இல்லை எனினும் அறிகுறிகள் கையாள மருத்துவர் வழிகாட்டுவார். தீவிர நிலையில் மருத்துவமனையில் நரம்பு வழி திரவங்கள் மற்றும் இரத்த மாற்றம் தேவைப்படலாம். நீரேற்றமாக இருப்பதன் மூலம் வைரஸ் காய்ச்சலை படிப்படியாக கட்டுக்குள் கொண்டு வரலாம். ஓய்வும் அவசியம்.


டெங்கு வராமல் தடுக்க


கொசு இருக்கும் இடங்களில் கொசுவலை பயன்படுத்துங்கள்.

மாலை நேரங்களில் ஜன்னல் மற்றும் கதவுகளை மூடி வைப்பது நல்லது.

நல்ல நீரில் மட்டுமே ஏடிஎஸ் கொசுக்கள் முட்டையிடும் வாழும் என்பதால் தண்ணீரை திறந்து வைக்க கூடாது. தண்ணிர் தேங்க விடக்கூடாது. வாளி, பீப்பாய், டிரம், நீர்த்தொட்டி, மழைநீர் என தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சுற்றுப்புறங்களாஇ தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். கொசு அதிகமாக இருக்கும் இடங்களில் கொசு மருந்துகள் பயன்படுத்த வேண்டும். இதையெல்லாம் கவனமாக செய்தால் டெங்குவில் இருந்து தப்பிக்கலாம். 


இறுதியாக தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் குறித்து கவலை வேண்டாம். ஒவ்வொரு வருடமும் வரக்கூடியதுதான். 


பாதுகாப்பாக இருங்கள். வருமுன் காத்திடுங்கள். 


pengal
Author

pengal